கோலாலம்பூர், செப்டம்பர் -15 – சாலைகளில் எங்கு வாகனங்களை நிறுத்தலாம் எங்கெல்லாம் நிறுத்தக் கூடாது என்பது நம்மில் பலருக்குப் பிரச்னையாகத் தான் உள்ளது.
தேவையில்லாத இடத்தில் வாகனங்களை நிறுத்தி வம்பை விலைக்கு வாங்கிக் கொள்வது இன்னமும் நடக்கவே செய்கிறது.
அப்படியொரு சம்பவம் தான் டிக் டோக்கில் வைரலாகியுள்ளது.
தலைநகர் Jalan Sultan-னில் மஞ்சள் கோட்டில் நிறுத்தப்பட்ட Myvi காரால், பின்னால் வந்த இரண்டடுக்கு சுற்றுலா பேருந்துக்கு சிரமம் ஏற்பட்டது.
சினமடைந்த பேருந்து ஓட்டுநர் ஒலிப்பெருக்கியை எடுத்து Myvi காரோட்டிக்கு எச்சரிக்கை விடுப்பது வீடியோவில் தெரிகிறது.
காரை நிறுத்திச் சென்றவரைக் காணாததால், பேருந்து ஓட்டுநர் சினத்தில் பேருந்தை Myvi-வுக்கு மிக நெருக்கத்தில் ஓட்டிச் சென்றார்.
அதில் Myvi கார் உரசப்பட்டதா எனத் தெரியவில்லை.
அச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நிலைக்குத்தியது.
வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் Myvi-கு இதெல்லாம் தேவைதானா என கேள்வி கேட்டனர்.
இன்னும் சிலரோ, பேருந்து போவதற்கு தான் போதுமான வழி இருக்கிறதே, பிறகு ஏன் பேருந்து ஓட்டுநர் ஆவேசப்படுகிறார் என வாதிடுகின்றனர்.