Latestமலேசியா

சாலையை கடந்தபோது MPV வாகனத்தில் மோதப்பட்ட சிறுத்தை மடிந்தது.

சிரம்பான், மே 21 – சிரம்பான் புக்கிட் தங்காவுக்கு அருகே MPV காரினால் மோதப்பட்ட ஆண் சிறுத்தை ஒன்று கால்வாயில் மடிந்துக் கிடந்தது. சிரம்பானிலிருந்து Kuala Kelawang கிற்கு தமது குடும்பத்தினரை எற்றிச் சென்ற 38 வயதுடைய ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற அந்த வாகனம் சுமார் 40 கிலோ எடையைக் கொண்ட சிறுத்தையை மோதியதாக ஜெலுபு மாவட்ட போலீஸ் தலைவர் Maslan Udin தெரிவித்தார். அந்த வாகனம் மலைப்பகுதியிலிருந்து கீழே இறங்கி வலதுபுறப் பகுதியில் திரும்பியபோது திடீரென சாலையை கடந்த சிறுத்தையை மோதியது. அந்த விபத்துக்குப் பின் அந்த சிறுத்தை அருகேயுள்ள கால்வாக்கு சென்று அங்கு மடிந்தது. இந்த சம்பவத்தில அந்த வாகன ஓட்டுனர் மற்றும் அவரது குடும்பத்தினர் காயம் அடையவில்லையென நேற்று வெளியிட்ட அறிக்கையில் Maslan Udin தெரிவித்தார். இதனிடையே விபத்திற்குப் பின் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் அந்த சிறுத்தையை காணமுடிந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!