
கோலா திரெங்கானு. டிச 28 – சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் 102.83 கிரேம் கஞ்சா போதைப் பொருள் இருந்ததை போலீசார் கண்டனர். 250,000 ரிங்கிட்டிற்கும் கூடுதலான மதிப்பைப் கொண்ட அந்த போதைப் பொருள் Kuala Terengganu , Kampung Bukit Jong – கிற்கு அருகில் Plaza Tol Gemuruh பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோது ஐந்து கருப்பு பிளாஸ்டிக் பைகளில் கண்டெடுக்கப்பட்டதாக திரெங்கானு மாநில போலீஸ் தலைவர் டத்தோ Rohaimi Md Isa தெரிவித்தார். அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.