லண்டன், மார்ச் 3 – சாலை போக்குவரத்து குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக, தனது மரணத்தையே பொய்யாக்கிய பெண்ணுக்கு 8 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான முறையில் காரை செலுத்தியதோடு, நிற்கவும் தவறியதற்காக, 2020-இல் லண்டன், கில்பர்னில், 38 வயதான சோயி பெர்னர்ட் ( Zoe Bernard) கைது செய்யப்பட்டார்.
போலிஸ் விசாரணையில் சோயி பெர்னர்ட் தனது சகோதரியின் அடையாளத்தைப் பயன்படுத்தியதோடு, சோயி பெர்னர்ட் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
சோயி பெர்னர்ட் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருந்தாலும், தனது மரணத்தையே பொய்யாக்கி போலீசை ஏமாற்ற முயன்றதற்காக, அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.