கோலாலம்பூர், மே 11 – பெட்டாலிங் ஜெயா, Jalan Templer மற்றும்
Jalan othman னில் இன்று காலை மணி 7.05 அளவில் நிகழ்ந்த விபத்தில் சாலை சமிக்ஞை விளக்கை மோதிய கார் ஒன்று , மற்றொரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளை மோதியபின் அக்கார் தீப்பற்றி எரிந்தது . இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி Mohd Yusoff Karim என்பவர் காயம் அடைந்ததோடு கால் முறிவுக்கும் உள்ளானானதைத் தொடர்ந்து அவர் கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அவரது மோட்டார் சைக்கிளும் தீயில் அழிந்தது.
ஜாலான் othman னில் சென்று கொண்டிருந்தபோது பெண் ஒருவர் வேகமாக ஓட்டிவந்த கார் எச்சரிக்கை விளக்கை மோதியபின் தமது மோட்டார் சைக்கிளை மோதியதாக கோழி வியாபாரியான Muhamad yusoff தெரிவித்தார். James Tan என்ற மற்றொரு கார் ஓட்டுனரையும் அந்த கார் மோதியபோதிலும் அவர் காயம் அடையவில்லை. சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த Jalan Penchala வைச் சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தீயை அணைத்தனர்.