Latestமலேசியா

சாலை தடுப்பில் பெண்ணுக்கு பிரசவம்

கூச்சிங், ஜூன் 11 – கூச்சிங்–சமராஹான் ( Samarahan ) சாலை தடுப்பில்,  நள்ளிரவில், பெண் ஒருவர்  இரு பெண் போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன், அழகிய குழந்தையைப் பிரசவித்தார்.

சம்பவத்தின் போது, அந்த பெண், தனது கணவருடன் சரவாக் பொது மருத்துவமனைக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தார்.

சாலை தடுப்பை நெருங்கியபோது, தன்னால் இனியும் காத்திருக்க முடியாது எனவும், குழந்தையைப் பிரசவிக்கப் போவதாகவும் கணவரிடம் கூறினார்.

என்ன செய்வது என தடுமாறிய 20 வயது மதிக்கத்தக்க  அவரது கணவர்,  பின்னர் சாலை தடுப்பில் பணியில் இருந்த பெண் போலிஸ்  அதிகாரிகளின் உதவியை நாடினார்.
அவர்களின்  உதவியுடன் பாதுகாப்பாக குழந்தையைப் பிரசவித்த பெண், பின்னர் ஆம்புலன்ஸசில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!