Latestமலேசியா

சாலை தடுப்பு பரிசோதனையில் மனைவியை விட்டு தப்பியோடியவர் கைது

கோலாலம்பூர், அக் 23 – சாலை தடுப்பு பரிசோதனையினால் அதிர்ச்சியடைந்த ஆடவர் ஒருவர் மனைவியை இறக்கிவிட்டு தமது மோட்டார்சைக்கிளில் தப்பியோடியபோது போலீசார் அவரை விரட்டிப் பிடித்தனர்.

நேற்றிரவு ஜாலான் டூத்தா டோல் சாவடிக்கு அருகே போலீஸ் பரிசோதனையின்போது லைசென்ஸ் மற்றும் அடையாளக் கார்டை காட்டத் தவறிய அந்த ஆடவர் தப்பியோடினார்.

எனினும் 200 மீட்டருக்குள் அந்த நபரை அமலாக்க அதிகாரிகள் விரட்டிப் பிடித்தனர். இந்தோனேசிய சுரபாயாவைச் சேர்ந்த அந்த தம்பதியர் முறையான பயண ஆவணங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லையென சாலை போக்குவரத்துத்துறையின் திட்ட மற்றும் நடவடிக்கை பிரிவின் துணை தலைமை இயக்குனர் Aedy Fadly Ramli தெரிவித்தார்.

இதனிடையே சாலை போக்குவரத்து துறையின் பல்வேறு விதிமுறைகளை மீறியதற்காக 318 குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!