பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 14 – ஸ்ரீ இஸ்கந்தார், பேராக்கில், சாலை பராமரிப்புப் பணியாளர்கள், சாலையில் கோடுகளை வரைவதற்கு வீட்டிற்குப் பயன்படுத்தும் சாயத்தைப் பயன்படுத்தியதாகக் கூறி புகைப்படம் ஒன்று, சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.
முகநூலில், பகிரப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில் இரண்டு தொழிலாளர்கள் கட்டிடங்கள் அல்லது வீடுகளுக்குப் பயன்படுத்தும், நன்கு அறியப்பட்ட பிராண்ட் சாயத்தை தீட்டுவதைக் காணமுடிகிறது.
குறிப்பிட்ட விவரக்குறிப்புகளைப் பின்பற்றாமல் பணிகளைச் செய்யும் பராமரிப்பு ஒப்பந்தக்காரர்களின் நடவடிக்கைகளைக் குறித்து அந்த பதிவின் கீழ் வலைத்தளவாசிகள் பல்வேறு கருத்துப் பதிவுகளால் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
அதில் ஒருவர், ‘சாலை அடையாளங்களில் சுவரின் சாயத்தைப் பயன்படுத்துவது என்ன கொடுமை? சோம்பேறிகள் பணம் சம்பாதிக்க விரும்புவது போல் வேலையைச் செய்கிறார்கள்’ என்று கட்டமாகப் பதிவிட்ட கருத்து likes-களை அள்ளி வருகிறது.