Latestமலேசியா

சாலை விபத்தில் நான்காம் படிவ மாணவர் உயிரிழந்தார்

மலாக்கா, செப் 20: மலாக்காவில், மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் நான்காம் படிவ மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.அதனால், திரையரங்கில் படம் பார்க்கச் சென்ற அவரது ஆசை ஈடேராமல் போனது.

நேற்றிரவு மணி 9.16 வாக்கில் நிகழ்ந்த அவ்விபத்தில், 16 வயது முஹமட் அமார் ஷாமி, தலை மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அவ்விபத்து, மோட்டார் சைக்கிளையும், மூன்று கார்களையும் உட்படுத்தி இருந்ததை, மலாக்கா தெங்ஙா மாவட்ட போலீஸ் தலைவர் Christopher Patit உறுதிப்படுத்தினார்.

மாலிமிலிருந்து, டத்தாரான் பாலாவான் நோக்கி பயணித்த முஹமட் அமாரின் மோட்டார் சைக்கிள், கெலெபாங்கிலிருந்து, தாமான் ஸ்ரீ பண்டான் சாலை சந்திப்பில் வளைய முற்பட்ட Mercedes Benz E230 ரக காரை மோதி விபத்துக்குள்ளானது. அதனை தொடர்ந்து, 67 வயது ஆடவர் செலுத்திய அக்கார் கட்டுபாட்டை இழந்து ஹோண்டா ஏக்கொட், புரோட்டோன் Aeroback கார்களை மோதித் தள்ளியது. எனினும், காரோட்டிகள் காயம் ஏதுவும் இன்றி உயிர் தப்பினர். உயிரிழந்தவரின் உடல் சவப் பரிசோதனைக்காக, மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!