Latestமலேசியா

சாலை விபத்துகளில் பொருட்களை பட்டுவாடா செய்பவர்களில் 36 பேர் உயிரிழந்தனர்

கோலாலம்பூர், அக் 13 – இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம்வரை நாடு முழுவதிலும் பொருட்களை பட்டுவாடா செய்பவர்கள் சம்பந்தப்பட்ட 321 சாலை விபத்துக்களில் 36 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை சிலாங்கூரில் நிகழ்ந்திருப்தாக சிலாங்கூர் சாலை போக்குவரத்து துறையின் இயக்குனர் Nazli Md Taib தெரிவித்தார்.

சாலை சமிக்ஞை விளக்கை புறக்கணிப்பது, போக்குவரத்து விதிகளை மீறுவது, தலைக்கவசத்தை சரியாக அணியாமல் செல்வது போன்ற காரணங்களால் பொருட்களை பட்டுவாடா செய்வோர் அதிகமாக விபத்துக்களில் சிக்கி மரணம் அடைந்துள்ளதாக Nazli Md Taib கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!