Latestமலேசியா

சாஹிட் கையூட்டு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்

ஷா ஆலாம், செப் 23 – வெளிநாட்டு விசா முறை தொடர்பில் தான் எதிர்நோக்கியிருந்த 40 கையூட்டு குற்றச்சாட்டுகளில் இருந்து, முன்னாள் துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி விடுவிக்கப்பட்டிருக்கின்றார்.

அந்த வழக்கில் சாஹிட்டிற்கு எதிரான குற்றச் சாட்டுகளை நிரூபிப்பதற்கான உறுதியான ஆதாரங்களை , அரசாங்க தரப்பு வழக்கறிஞர்கள் முன் வைக்கத் தவறியிருப்பதாக, ஷா ஆலாம் உயர் நீதிமன்ற நீதிபதி Mohd Yazid Mustafa தெரிவித்தார்.

அதையடுத்து , சாஹீட்டை தற்காப்பு வாதம் புரிய அழைக்காமலே, அவரை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து விடுதலை செய்வதாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

69 வயதான அஹ்மாட் சாஹிட் , உள்துறை அமைச்சராக இருந்தபோது, Ultra Kirana நிறுவனத்திடமிருந்து 4 கோடியே 40 லட்சம் ரிங்கிட்டை கையூட்டாக பெற்றதாக 33 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அந்த நிறுவனம், சீனாவில் தொடர்ந்து ஓரிட சேவை மையத்தை வழிநடத்துவதற்கான ஒப்பந்தத்தை நீட்டிக்கவும், வெளிநாட்டு விசா முறைக்கான சேவையை வழங்க செய்யப்பட்ட ஒப்பந்தத்தை தக்க வைத்துக் கொள்ளவும், அவர் அந்த கையூட்டைப் பெற்றதாக குற்றச் சாட்டுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, உள்துறை அமைச்சராக இருந்தபோது, தமது அதிகாரப்பூர்வ பணியுடன் தொடர்பு இருந்த, அதே நிறுவனத்திடமிருந்து , 11 லட்சத்து 50 -ஆயிரம் சிங்கப்பூர் டாலரையும், 30 லட்சம் ரிங்கிட்டையும், 15,000 சுவீஸ் ஃபிராங்க்-கையும் , 15, 000 அமெரிக்க டாலரையும் தனக்காக பெற்றதாக மேலும் 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன .

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!