
புத்ரா ஜெயா, ஏப் 26 – 15ஆவது பொதுத் தேர்தலில் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக பி.கே.ஆர் கட்சியைச் சேர்ந்த R. Yuneswaran தேர்வு பெற்றதை எதிர்த்து தேசிய முன்னணி வேட்பாளரும் ம.இ.காவின் தேசிய பொருளாளருமான
டான்ஸ்ரீ M .ராமசாமி கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இதற்கு முன் Yuneswaran மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக செய்திருந்த ராமசாமியின் வழக்கு மனுவை இம்மாத தொடக்கத்தில் மூவார் தேர்தல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த முடிவை எதிர்த்து ஏப்ரல் 14ஆம் தேதியன்று ராமசாமி மேல் முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளார். தேர்தல் சட்டத்தின் கீழ் தேர்தல் வழக்கில் தோல்வி கண்ட தரப்பு நீதிமன்றத்தின் முடிவு வெளியான 14 நாட்களுக்குள் கூட்டரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்யவேண்டும். இந்த வழக்கிற்கு தேதி குறித்து நீதிமன்றம் நீதிமன்றம் முடிவு செய்யும்.