Latestஉலகம்

சிகாகோ ரயிலில் துப்பாக்கிச் சூட்டு; 4 பேர் பலி

வாஷிங்கடன், செப்டம்பர் 3 – அமெரிக்காவின் சிக்காகோ (Chicago) நகரில் ரயிலுக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில், நால்வர் கொல்லப்பட்டனர்.

Forest Park ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தில், 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்; மேலும் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்று காவல்துறை கூறுகிறது.

கண்காணிப்புக் கேமராவில் பதிவான அடையாளத்தை வைத்து துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளான்.

அந்த நபரிடமிருந்து சுடும் ஆயுதமொன்றும் கைப்பற்றப்பட்டது.

அந்த ஆடவனுக்கு பாதிக்கப்பட்டவர்கள் யாரையும் தெரியும் என்பதற்கு எந்த ஆதராமும் இல்லை என்றும், இந்த சம்பவம் வழிப்பறி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையதாக இல்லை; மாறாக வன்முறைச் செயலாகத் தெரிகிறது என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மிகப் பெரிய அளவில் பொதுப் போக்குவரத்தை நம்பியிருக்கும் நகர்களில் ஒன்றாக சிக்காகோ திகழ்கிறது. சிக்காகோவில் வார நாட்களில் சராசரியாக 317,000க்கும் அதிகமானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், துப்பாக்கி வன்முறை காப்பகத்தின் தகவலின் படி, இந்த ஆண்டு, குறைந்தது 378 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்த துப்பாக்கி வன்முறையில் குறைந்தது, 11,463 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!