
கோலாலம்பூர், மே 7 – சிகாம்புட் ரயில் நிலையத்தில் ஏ.டிஎம் இயந்திரத்தில் பணத்தை மீட்ட ஆடவரை அறுவர் கொண்ட கும்பல் தாக்கி கொள்ளையிடும் காட்சியைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றும் செய்யப்பட்டுள்ளது. இது போலியான காணொளி என்பதோடு பிரேசிலில் நடைபெற்ற சம்பவத்தைக் கொண்ட அந்த காணொளியை பகிர வேண்டாம் என்றும் பொதுமக்களை போலீசார் கேட்டுக்கொண்டனர். இதனிடையே அந்த வீடியோ போலியானது என்பதால் அதனை பதிவேற்றம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசியன் ரயில்வேயும் தனது முகநூலில் எச்சரித்துள்ளது.