சிங்கப்பூரின் ஒலி968 வானொலி அறிவிப்பாளர் குணாளன் மோர்கன் மீது பாலியல் குற்றச்சாட்டு

சிங்கப்பூர், மார்ச்-22 – சிங்கப்பூர் Mediacorp நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஒலி96.8 வானொலியின் அறிவிப்பாளர் குணாளன் மோர்கன் மீது, பெண்களின் அந்தரங்க உறுப்புகளைக் கைப்பேசியில் பதிவுச் செய்ததாகவும், 16 வயதுக்குட்பட்ட பிள்ளையுடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு கொண்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
43 வயதான குணாளன் மீது 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன; அவற்றில் 4 பாலியல் குற்றங்களுடன் தொடர்புடையவை.
குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது குணாளன் சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் முன்னிலையாகவில்லை; அவரும் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை.
பின்னர் வழக்குறிஞரை நியமிப்பதாக நீதிதியிடம் அவர் தெரிவித்தார்.
வழக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி மறுசெவிமெடுப்புக்கு வருமென நீதிபதி அறிவித்தார்.
ஒலி96.8 வானொலியில் அறிவிப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் குணாளன் இருந்து வருகிறார்.
இந்நிலையில், குணாளன் கைதான கையோடு அவரைப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்திருப்பதை Mediacorp நிறுவனம் உறுதிப்படுத்தியது.