Latestசிங்கப்பூர்
சிங்கப்பூரின் Clementi அடுக்குமாடி வீட்டில் தீ; மின்சார சைக்கிளின் பேட்டரி ச்சார்ஜரால் வந்த வினை
சிங்கப்பூர், ஆகஸ்ட்-12 – சிங்கப்பூரின், Clementi West Street 2 பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ சம்பவத்திற்கு, படுக்கையறையில் வைத்து மின்சார சைக்கிளுக்கான பேட்டரியை ச்சார்ஜ் செய்ததே காரணமென நம்பப்படுகிறது.
சிங்கப்பூர் பொது தற்காப்புப் படையின் (SCDF) தொடக்கக் கட்ட விசாரணையில் அது கண்டறியப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீசும் தீயணைப்பு மீட்புத் துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுக்குமாடியிலிருந்து சுமார் 35 பேரை அங்கிருந்து வெளியேற்றின.
அடுக்குமாடியின் ஆக மேல் தளத்திலிருந்து தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.