Latestசிங்கப்பூர்
சிங்கப்பூரின் Marina Bay Sands ஆடம்பர தங்கும் விடுதியின் 665,000 வாடிக்கையாளர்களின் தரவுகள் களவு

சிங்கப்பூர், நவ 7 – சிங்கப்பூரின் Marina Bay Sands ஆடம்பர தங்கும் விடுதியின் 665,000 வாடிக்கையாளர்களின் தரவுகள் களவாடப்பட்டுள்ளதாக அந்த தங்கும் விடுதியின் நடத்துனர் கூறியுள்ளார்.
இந்த திருட்டு கடந்த அக்டோபர் 20-ஆம் திகதி கண்டறியப்பட்டதாக Marina Bay Sands – சின் உரிமையாளரான Las Vegas Sands தெரிவித்தது.
கடந்த வாரம், சிங்கப்பூரின் பொது சுகாதார அமைப்புகள் மீது இணையத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையக் காலமாக சிங்கப்பூரில் இதுபோன்ற இணையத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்திருப்பது பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.