சிங்கப்பூர், செப்டம்பர் -7 – சிங்கப்பூரிலிருந்து சீனாவின் Guangzhou செல்லும் வழியில் Scoot விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியதில், 7 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் நால்வர் பயணிகள், மூவர் விமானப் பணியாளர்கள் ஆவர்.
நேற்று காலை நிகழ்ந்த அச்சம்பவத்தில் பயணி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Guangzhou-வை நெருங்கும் சமயத்தில் காற்றுக் கொந்தளிப்பு ஏற்பட்டு விமானம் நடுவானில் குலுங்கியது.
எனினும் அது பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டு, உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்களின் நலனே முக்கியம் எனக் கூறிய Scoot விமான நிறுவனம், அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றது.
எனினும் சம்பவத்தின் போது விமானத்தினுள் இருந்த மொத்த பயணிகள், பணியாளர்கள் எண்ணிக்கைக் குறித்து தெரிவிக்கப்படவில்லை.