
சிங்கப்பூர், ஜன 12 – பயங்கரவாத குற்றங்கள் தொடர்பில் சிங்கப்பூரின் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 38 வயதுடைய அந்த ஆசிரியர் தீவிரவாத இயக்கத்தில் இணைவதற்காக Gaza வுக்கு புறப்படுவதற்கு திட்டமிருந்ததாக கூறப்பட்டது. சிங்கப்பூர் கல்வி அமைச்சில் பணியாற்றிவரும் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டதை சிங்கப்பூர் அரசாங்கம் உறுதிப்படுத்தியது. எனினும் கடந்த அக்டோபர் மாதம் முதல் அந்த ஆசிரியர் எந்தவொரு பள்ளியிலும் வகுப்புக்களில் போதிக்கவில்லை என்றும் சிங்கப்பூர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.