சிங்கப்பூர், பிப் 16 – சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் மட்டும் 19,420 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். திங்கட்கிழமையன்று 9,082 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளான வேளையில் அந்த எண்ணிக்கை நேற்று திடீரென இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்ந்ததாக சிங்கப்பூர் ஸ்டிரெய்ட்ஸ் டைய்ம்ஸ் தகவல் வெளியிட்டது.
உள்நாட்டைச் சேர்ந்தவர்களில் 19,179 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். RTK- Antigen பரிசோதனையின் மூலம் 16,102 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளானது தெரிய வந்தது. இதன்வழி சிங்கப்பூரில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது நான்கு லட்சத்து 97,997 ஆக உயர்ந்துள்ளது.