Latestசிங்கப்பூர்
சிங்கப்பூரில் காதலனுடன் சண்டை; பலாத்காரம் செய்யப்பட்டதாக பொய்ப் போலீஸ் புகார் அளித்த பெண் கைது

சிங்கப்பூர் அக் 3 – சிங்கப்பூரில் காதலனுடன் சண்டையிட்டு போலீசிடம் பொய்யான புகார் அளித்ததற்காக 22 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலன் தன்னை மூன்று முறை பலவந்தப்படுத்தியதாகவும் உடலளவில் சித்ரவதை செய்வதாகவும் தன்னை வெளியே விட மறுப்பதாகவும் அப்பெண் போலீஸில் புகார் அளித்திருந்தார்.
போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த போதும், மருத்துவ பரிசோதனையின்போதும் இதனை அவர் தொடர்ந்து கூறி வந்தார். இதனால், போலீசார் அக்காதலனை கைது செய்து வாக்குமூலம் வாங்கவும் முனைந்துள்ளனர்.
இதனையடுத்து, ஒரு மாதம் கழித்து அது பொய்யான தகவல் என கூறி அந்த புகாரை வாபஸ் வாங்கியிருக்கின்றார் அக்காதலி.
இதனிடையே, தவறான நோக்கத்திற்காக பொது சேவைத் துறையை பயன்படுத்தியதற்காக அப்பெண் மீது குற்றம் சாட்டப்பட்டு 5 வார சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது