Latestசிங்கப்பூர்

சிங்கப்பூரில் சைக்கிளோட்டியை முந்திச் சென்ற மலாயா தாபிர் விலங்கு ; இணையவாசிகள் அதிர்ச்சி

சிங்கப்பூர், செப்டம்பர் 12 – பூங்கா ஒன்றில், நேற்று அதிகாலை, தம்மை வேகமாக முந்தி சென்ற மலாயா தாபிர் விலங்கை கண்டு சைக்கிளோட்டி ஒருவர் அதிர்ச்சியடைந்தார்.

அது தொடர்பான காணொளியை தமது ‘Pong Posadas’ எனும் முகநூலில் அவ்வாடவர் பதிவிட்டுள்ளார்.

உள்நாட்டு நேரப்படி நேற்று அதிகாலை மணி 6.30 வாக்கில், பூங்காவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த அவரை, பின்னாலிருந்து வேகமாக ஓடி வரும் விலங்கு ஒன்று முந்திச் செல்வதை அந்த காணொளி காட்டுகிறது.

முதலில், குதிரை ஒன்று தமது பின்னால் ஓடி வருவதாக எண்ணிய அவர், சைக்கிளை மொதுவாக்கி, அந்த விலங்கு தம்மை முந்திச் செல்ல இடம் கொடுத்தார்.

எனினும், பின்னர் தான் அது குதிரை அல்ல தாபிர் விலங்கு என்பதை கண்டதாக, அந்நபர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த ஜூலை 22-ஆம் தேதி, மலேசியாவிலிருந்து நீந்தி சிங்கப்பூருக்குள் நுழைந்த மலாயா தாபிர் ஒன்று, புங்கோல் பூங்கா பகுதியில் சுற்றி திரிந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தன.

அந்த மலாயா தாபிர், பாதுகாப்பாக அதன் பூர்வீக இடத்திற்கே அனுப்பி வைக்கப்படுமென, சிங்கப்பூர் விலங்குகள் நல ஆராய்ச்சி மற்றும் கல்வி சங்கத்தின் இணை செயல்முறை அதிகாரி, கலை வாணன் பாலகிருஷ்ணன் கூறியிருந்தார்.

எனினும், சைக்கிளோட்டியை முந்திச் சென்ற தாபிரும், இதற்கு முன் புங்கோல் பூங்காவில் சுற்றித் திரிந்த தாபிரும், ஒரே விலங்குதானா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!