
சிங்கப்பூர், பிப் 2 – சிங்கப்பூரில் முக்கிய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த ஐ.எஸ் ஆதரவாளரான 18 வயது மாணவன் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். ராணுவ முகாம் ஒன்றையும் பள்ளிவாசலில் மையத்துக் கொல்லையிலும் அவன் தாக்குதல் நடத்துவதற்கு பரிசீலித்து வந்தாக தெரிகிறது. ஐ.எஸ் ஆதரவாளராக அந்த மாணவன் மக்களை கொல்லும் நோக்கத்தோடு கத்தியையும் வைத்திருந்ததாக கூறப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் வர்தக மையத்தில் Muhamad Irfan Danyal Mohaman Nor என்ற அந்த மாணவன் பொம்மை துப்பாக்கி மற்றும் கத்தியையும் வாங்கியுள்ளான்.
கடந்த டிசம்பர் மாதம் அவன் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் உள்துறை விவகாரங்கள் மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்திருக்கிறார்.
2014ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு சமய போதகரான Zakir Naik போன்றவர்களின் யுடியூப் காணொளிகளையும் Mohamad Irfan கண்டு வந்துள்ளான். இணையத்தள பிரச்சாரத்தினால் கவரப்பட்ட Muhamad Irfan ஆயுத கலவரத்தில் ஈடுபடுவதற்காக வெளிநாட்டிற்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தான்.