
கோலாலம்பூர், ஜன 18 – போதைப் பொருளைக் கடத்தியதற்காக சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் 3 மலேசியர்களின் மேல் முறையீடு, இவ்வாரம் வெள்ளிக்கிழமை அக்குடியரசின் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் செவிமடுக்கப்படவுள்ளது.
தட்சிணாமூர்த்தி கட்டையா, பன்னீர் செல்வம் பிரந்தாமன், சாமிநாதன் செல்வராஜு ஆகிய 3 மலேசியர்கள் உட்பட 12 பேரின் மேல் முறையீடு அந்த நீதிமன்றத்தில் செவிமடுக்கப்படவிருக்கிறது.
இவ்வேளையில், போதைப் பொருள் கடத்தியதற்காக குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆனால் மரண தண்டனை விதிக்கப்படாத கோபி அவேடியன் எனும் மற்றொரு மலேசியரும் மேல் முறையீடு செய்திருப்பதாக, மரண தண்டனையை எதிர்க்கும் ஆசிய கட்டமைப்பைச் சேர்ந்த Dobby Chew தெரிவித்தார்.