Latestமலேசியா

சிங்கப்பூரில் மலேசியாவைச் சேர்ந்த தாதி காருண்யா தற்கொலை; குவியும் அனுதாபங்கள்

கோலாலம்பூர், டிச 10 – சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில் வேலை செய்து வந்த மலேசியாவைச் சேர்ந்த தாதியான காருண்யா பாஸ்கரன், தொடர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டிருக்கும் தகவல் பலரையும் பாதிக்கச் செய்திருக்கின்றது.

எப்போதும் நிதானமாகவும் , கோபப்படாதவராகவும் சக பணியாளர்களால் அறியப்பட்டவர் காருண்யா. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக எந்தவொரு அறிகுறியையும் அவர் வெளிப்படுத்தவில்லை.
ஆனால் அண்மைய காலமாக, எந்நேரமும் காப்பியை அதிகம் குடித்து வந்தவரான அவர் அதிகம் உடல் மெலிந்து போனதாக, காருண்யாவின் சக பணியாளர்கள் தெரிவித்தனர்.

உடனிருப்பவர்கள் அல்லது நண்பர்களின் ஆதரவு இருந்திருந்தால் அல்லது மன அழுத்தத்திற்கு போதிய விடுப்பை எடுத்துக் கொண்டிருந்தால் , அவரது மரணத்தை தவிர்த்திருக்கலாமென காருண்யாவின் நண்பர் தெரிவித்தார்.

காருண்யாவிற்கு நேர்ந்த துயரம் தொடர்பில், சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், அக்குடியரசின் சுகாதார அமைச்சர் Ong Ye Kung ஆகியோர் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!