Latestஉலகம்

சிங்கப்பூரில் முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட 30% மக்கள் கோவிட்டால் மரணம்

சிங்கப்பூர், ஜன 12- சிங்கப்பூரில் கோவிட் தொற்றுக்கு எதிரான முழு தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களில் 30 விழுக்காட்டினர் அத்தொற்றினால் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் Ong Ye Kung தெரிவித்துள்ளார். டெல்தாவால் நாள் ஒன்றுக்கு 3000 பேருக்கு தொற்று கண்டது என்றால், தற்போது ஒமிக்ரோன் 10,000 முதல் 15,000 பேர் வரை தாக்கக் கூடிய ஆற்றல் கொண்டதாக இருப்பதாக் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரைத் தற்போது ஒமிக்ரோன் கோவிட் வைரஸ் தாக்கம் அச்சுறுத்திவருகின்றது.

இந்நிலையில், நிலைமை இன்னும் மோசமடையக்கூடுமானால், கோவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் Lee Hsien Loong கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!