Latestஉலகம்சிங்கப்பூர்மலேசியா

சிங்கப்பூரில் மேலும் ஒரு மலேசியர் அடுத்த வாரம் தூக்கிலிடப்படுவார்

கோலாலம்பூர், ஜூன் 30 – போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக ஜூலை 7-ஆம் தேதி மற்றொரு மலேசியரான 32 வயதுடைய Kalwant Singh-கிற்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. 60.15 கிரேம் Diamorphine வைத்திருந்தது மற்றும் 120.9 கிரேம் போதைப் பொருளை கடத்தியதில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 23 வயதாக இருக்கும்போது Kalwant கைது செய்யப்பட்டார். கடந்த 9 ஆண்டுகளாக அவர் சிறையில் இருந்து வருகிறார் என சிங்கப்பூர் மனித உரிமை நடவடிக்கையாளரான Kirsten Han டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

2020-ஆம் ஆண்டு கோவிட் தொற்று பரவியது, நிதி நெருக்கடி மற்றும் மருத்துவ காரணங்களால் Kalwant னை பார்க்க முடியாமல் இருந்ததால் அவரது சகோதரி சோனியா மற்றும் உறவினரான Kelvina ஆகியோர் இம்மாத தொடக்கத்தில் அவரை பார்க்கச் சென்றனர். எனினும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பொதுவாகவே மரண தண்டனைக்கு காத்திருக்கும் கைதிகளை வழக்கமாக சனிக்கிழமை அல்லது திங்கட்கிழமை சநத்திக்க முடியும் என்றாலும் செவ்வாய்க்கிழமை கூடுதலாக வருகை புரிய முடியுமா என வினவியபோதிலும் அனுமதி மறுக்கப்பட்டு விடடதாக Kirsten Han காணொளி வாயிலாக தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி மலேசியரான நாகேந்திரன் K. தர்மலிங்கத்திற்கு போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூரில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!