கோலாலம்பூர், பிப் 17- சிங்கப்பூரில் போதைப் பொருளைக் கடத்திய இருவரின் மரணத் தண்டை நிறைவேற்றப்படுவதை தற்காலிகமாக ஒத்தி வைக்கும் உத்தரவை அக்குடியரசின் அதிபர் ஹலிமா யாக்கோப் வெளியிட்டார்.
மரணத் தண்டனைக்கு எதிராக அவ்விருவரின் வழக்கறிஞர்கள் இதற்கு முன்பு நீதிமன்றத்தில் செய்திருந்த மேல் முறையீடுகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன . இந்நிலையில் அவ்விருவரது தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் உத்தரவை அந்நாட்டு அதிபர் வெளியிட்டிருப்பதாக, மனித உரிமை வழக்கறிஞரான எம். ரவி தெரிவித்தார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களான மலேசியாவைச் சேர்ந்த Pausi Jefridin , சிங்கப்பூரின் Roslan Bakar இருவருக்கும் நேற்று புதன்கிழமை அந்த தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது.