
கோலாலம்பூர், மார்ச் 20 – மலேசியாவுக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டிருக்கும் சிங்கப்பூர் அதிபர் Halimah Yacob-பிற்கு இன்று இஸ்தானா நெகாராவில் அரசாங்க வரவேற்பு நல்கப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் இஸ்தானா நெகாரா வந்தடைந்த Halimah மற்றும் அவரது கணவர் Mohamed Abdullah Alhabshee-யை மாட்சிமை தங்கிய பேரரசர் Al Sultan Abdullah மற்றும் பேரரசியார் Tunku Azizah ஆகியோர் வரவேற்றனர். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரது துணைவியார் டாக்டர் வான் அஸிஸா, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் Ahmad Zahid Hamidi மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். வரவேற்பு சடங்கில் அணிவகுப்பு மரியாதையும் Halimah பார்வையிட்டார். அதன் பின் பேரரசர் மற்றும் பேரரசியாருடன் அரசாங்க மதிய விருந்து நிகழ்விலும் சிங்கப்பூர் அதிபர் கலந்துகொண்டார்.