Latestசிங்கப்பூர்

சிங்கப்பூர் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று தொடங்கியது

சிங்கப்பூர், செப் 1 சிங்கப்பூரில் 9ஆவது அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இன்றிரவு இரவு 8 மணிவரை நடைபெறும் வாக்களிப்பில் 27 லட்சம்பேர் வாக்களிப்பார்கள். அதிபர் தேர்தலில் முதல் முறையாக 10 ஆண்டுகளுக்கு பின் வாக்களிக்கும் வாய்ப்பை வாக்காளர்கள் பெற்றனர். ஆளும் கட்சியின் ஆதரவோடு அதிபர் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Tharman Shanmugaratnam போட்டியிடுகிறார்.

ஆளும் மக்கள் செயல் கட்சியின் நீண்ட கால தலைவர்களில ஒருவரான 66 வயதான Tharman Shanmugaratnam அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது அரசாங்கப் பதவியை ராஜினாமா செய்தார். காப்புறுதி துறையின் முன்னாள் நிர்வாகிய 75 வயதுடைய Tan Kin Lian , முன்னாள் முதலீ ட்டு அதிகாரியான 75 வயதுடைய Ng KoK song கும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். அதிபராக தேர்ந்தெடுக்கப்படுபவர் ஆறு ஆண்டு கால தவணைக்கு அதிபர் பதவியை வகிப்பார். வாக்களிப்பு முடிந்தவிடும் வாக்குகள் எண்ணும் பணி உடனடியாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!