Latestஉலகம்

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிட மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் முன்வந்தார்

சிங்கப்பூர், ஜூன் 9 – இவ்வாண்டு நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் முன்வந்துள்ளார். நடப்பு அதிபர் Halimah Yacob மீண்டும் போட்டியிடப் போவதில்லையென அறிவித்துள்ளதால் சிங்கப்பூரின் சமூதாய கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான 66 வயதுடைய தர்மன் சண்முகரத்னம் அதிபர் பதவிக்கு போட்டியிடும் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார். அதிபர் பதவியில் போட்டியிடுவதற்காக தமது அமைச்சர் பதவி மற்றும் ஆளும் மக்கள் செயல் கட்சியிலிந்து விலகும் முடிவை பிரதமர் Lee Hsien Loong கிடம் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமராகவும், இருந்துள்ள அவர் கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளில் இருந்துள்ளதோடு அரசியல் முதல் மக்களின் வாழ்க்கை தரத்தில் முன்னேற்றத்தை கொண்டு வருவதற்காக பல்வேறு மாற்றங்களையும் சீரமைப்புகளையும் கொண்டு வந்துள்ளார். சம்பள அதிகரிப்பு மற்றும் சிங்கப்பூரியர்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு முக்கிய பங்காற்றிய தமது அமைச்சர் குழுவின் உறுப்பினராக தர்மன் சண்முகரத்னம் இருந்துள்ளதாக பிரதமர் Lee Hsien Loon நேற்று தமது முகநூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!