Latestஉலகம்

சிங்கப்பூர் காட்டில் 30 ஆண்டுகளாக வசித்து வரும் முதியவர்

சிங்கப்பூர், பிப் 21 – வானுயர் மற்றும் ஆடம்பர கட்டடங்களுடன் உலகின் மேம்பாடு கண்ட நகர்மயமாக சிங்கப்பூர் திகழ்கிறது. இந்நிலையில், அந்த குடியரசில் ஆடவர் ஒருவர் 30 ஆண்டுகளாக காட்டில் வசித்து வருவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

79 வயதான Oh Go Seng, 1980 -களில் Sungai Tengah எனும் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். பின்னர் வானுயர் கட்டடங்களாக அவரது கிராமம் அழிக்கப்பட , அக்கிராமத்தில் வசித்தவர்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்பட்டன. ஆனால் தனக்கென ஒரு வீட்டினைப் பெறத் தவறிய Oh Go Seng –கை அவரது சகோதரர் தனது வீட்டில் தங்க அழைத்திருக்கின்றார்.

எனினும், தனது சகோதரரின் குடும்பத்திற்கு சிரமத்தை கொடுக்க விரும்பாத அவர், தனது வீடு உடைக்கப்பட்ட பகுதிக்குள் அருகில் இருக்கும் காட்டில் , கூடாரத்தை அமைத்து , காய்கறிகளை நட்டு அதிலிருந்து சிறிது பணத்தை ஈட்டி வந்தார். அண்மையில் அவரது கதை வெளிச்சத்துக்கு வந்து சிங்கப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!