Latestமலேசியாவிளையாட்டு
சிங்கப்பூர் குழுவை 7 – 0 கோல் கணக்கில் மலேசியா வீழ்த்தியது.

நொம்பென் , மே 12 – சிங்கப்பூர் குழுவை 7- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் சீ போட்டியில் Harimau மலேசிய குழுவின் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. பயிற்சியாளர் E.Elavarasan தலைமையிலான மலேசிய குழுவினர் அரையிறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெறத் தவறியது காந்பந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தாலும் பி.பிரிவின் நேற்றைய கடைசி ஆட்டத்தில் சிங்கப்பூர் குழுவை கூடுதல் கோல் கணக்கில் வீழ்த்தியது ஆறுதலாக அமைந்தது என்று கூறலாம். நேற்றைய ஆட்டத்தில் மத்திய திடல் ஆட்டக்காரரான T. Saravanan அடுத்தடுத்து 4 கோல்களை அடித்தார். மலேசிய குழுவிற்கான இதர மூன்று கோல்களை Haqimi Azim Rosli , Mukhairi Ajmi Mahadi, Aiman Afif Mohd Afizul ஆகியோர் அடித்தனர்.