புதுடில்லி, பிப் 18 – சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong பாராட்டிப் பேசியது இந்தியாவில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பல அரசியல் தலைவர்களின் ஜனநாயக நடைமுறைகளை பல நாடுகள் அங்கீகரிக்கத் தவறியதையும் Lee Hsien Loong சுட்டிக்காட்டினார். இந்திய நாடாளுமன்றத்தில் கிரிமினல் எம்.பி.க்கள் இருப்பதாக பிரதமர் லீ கூறியதாக வெளியான தகவலால் இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது.
இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதரக உயர் அதிகாரியிடம் சிங்கப்பூர் பிரதமரின் கருத்து தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சு விளக்கம் கேட்டதாகவும் புதுடில்லி தகவல்கள் கூறின. நேருவை சிங்கப்பூர் பிரதமர் பாராட்டி பேசும் காணொளியை காங்கிரஸ் தலைவர்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.