
கோலாலம்பூர், ஜூன் 2 – அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் பொது பேட்மிண்டன் போட்டியில் அதிரடி படைப்பதற்கு மலேசியாவின் முன்னணி மகளிர் இரட்டையர் ஜோடியான பியர்லி – எம்.தீனா உறுதிபூண்டுள்ளனர். கடந்த வாரம் கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றதன் மூலம் புதிய உத்வேகத்தையும் எழுச்சியையும் பெற்றிருப்பதாக தீனா தெரிவித்தார். சிங்கப்பூர் பொது பேட்மிண்டன் போட்டிக்கு நாங்கள் தயாராகி வருகிறாம். மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் இறுதியாட்டத்தில் தென் கொரிய ஜோடியிடம் அடைந்த தோல்வியை மறந்துவிட்டோம். புதிய பலத்தோடு மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையில் இப்போது நாங்கள் இருக்கிறோம் என இன்று பயிற்சியல் கலந்துகொண்ட பின் தீனா நம்பிக்கையோடு தெரிவித்தார்.