Latestமலேசியா

“சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து நேரடி விமான சேவை தேவை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை, நவ 25- ஒன்றிய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு சிங்கப்பூர் மற்றும் மலேசியா கோவிட் கால விமானப் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளாததால், தற்போதைக்கு அந்நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் நேரடியாக தமிழகத்திற்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து, சிங்கப்பூர், மலேசியாவிற்கு இடையில் தற்காலிக கோவிட் கால விமானப் போக்குவரத்துக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் தற்போது சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப துபாய், டோஹா மற்றும் கொழும்பு மார்க்கமாக மாற்றுப் பாதையில் பயணம் மேற்கொள்வதை சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!