Latestமலேசியா

சிங்கப்பூர் வழக்கறிஞர் எம். ரவி 5 ஆண்டுகளுக்கு இடை நீக்கம்

சிங்கப்பூர். மார்ச் 21 – சிங்கப்பூர் வழக்கறிஞர் M. ரவி கூடியபட்சம் 5 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞர்களுக்கான Misconduct அல்லது தவறான செயல்பாட்டிற்காக மூன்று நீதிபதிளைக் கொண்ட நீதிமன்றம் வழக்கறிஞர் ரவிக்கு எதிராக இந்த முடிவை எடுத்தனர். சட்டத்துறை தலைவர், சட்டத்துறை அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் சட்டக் கழகத்திற்கு எதிராக கடுமையான மற்றும் அடிப்படையற்ற குற்றசசாட்டுக்களை தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சட்ட முறையின் தூண்களை கவனக்குறைவு மற்றும் அடிப்டையற்ற வகையில் கீழறுப்பு செய்வதற்கு எந்த வழக்கறிஞருக்கும் அனுமதிக்க முடியாது என தலைமை நீதிபதி Sundaresh Menon தீர்ப்பளித்தார். Ravi Madasamy எனப்படும் ரவி கடந்த 20 ஆண்டுகாலமாக வழக்கறிஞராக இருந்துள்ளார். மரண தண்டனை தொடர்பான வழக்குகளில் தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டதால் அவர் பலமுறை சர்ச்சைக்கு உள்ளானார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!