கோலாலம்பூர். பிப் 28 – சிங்கப்பூரில் குடியிருக்கும் அல்லது வேலை செய்யும் 200,000 ஜோகூர் மக்கள் மார்ச் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் அஞ்சல் வாக்காளர்களாக வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர்.
தடுப்பூசிக்கான மாநில அரசாங்கத்தின் செயலியின் மூலம் இந்த புள்ளிவிவரம் தெரியவந்துள்ளதாக ஜோகூர் மந்திரிபெசார் ஹஸ்னி முகமட் தெரிவித்தார். சிங்கப்பூரில் வேலை செய்துவரும் மூன்று லட்சம் பேரில் இரண்டு லட்சம் ஜோகூர் மக்கள் வாக்களிக்கும் தகுதியை கொண்டிருப்பதாக அவர் கூறினார்.