Latestமலேசியா

சிசுவின் சடலம் 2 வாரங்கள் தடுத்து வைப்பா? KMI Healthcare மறுப்பு

கோலாலம்பூர், டிச 11 – Kumpulan Medic Iman Sdn Bhd ( KMI Heathcare ) நிறுவனம் ஒரு மகப்பேறு மருத்துவமனையின் உரிமையாளர் என்பதை மறுத்துள்ளதோடு ஒரு சிசுவின் சடலத்தை கையாள்வதில் மனிதாபிமானமற்ற முறையில் குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்ததாக கூறப்படுவதையும் நிராகரித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பங்குகள் விற்பனைக்கான கொள்முதல் உடன்பாடு கையெழுத்திடப்பட்ட போதிலும் அந்த தனியார் மருத்துவ மையம் தங்களுக்கு உரிமையானது அல்ல என திரெங்கானு அரசாங்கத்ததிற்கு சொந்தமான TDM Berhad துணை நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்னும் பூர்த்தி செய்யப்படாத பல முன்நிபந்தனைகள் இருப்பதால் சம்பந்தப்பட்ட உடன்பாடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டு பரிவர்த்தனை முடிவடையும் வரை, KMI ஹெல்த்கேர் மருத்துவமனையின் மீது எந்த உரிமையும் அல்லது பொறுப்பும் தங்களுக்கு இல்லையென TDM மறுத்துள்ளது. எனவே, கேஎம்ஐ ஹெல்த்கேர் தொடர்பான எந்தவொரு நடவடிக்கை அல்லது பிற சிக்கல்களுக்கும் பொறுப்பேற்க முடியாது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிள்ளானில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் கேஎம்ஐ ஹெல்த்கேர் என்று சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.குறைப்பிரசவத்தில் பிறந்த சிசுவின் உடலை நிர்வகிப்பதில் அந்த தனியார் மருத்துவமனையின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் குறித்து சவ வாகனத்தை நடத்திவரும் அரசு சார்பற்ற இயக்கம் ஒன்று என்று நேற்று சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியிருந்தது.
ஒரு கண், மூக்கு மற்றும் ஆசனவாய் இல்லாமல் பிறந்த Adham என்ற அந்த சிசுவை மருத்துவமனை ஊழியர்கள் சிறுமைப்படுத்தியதோடு, அந்த சிசுவின் சடலம் இரண்டு வாரங்கள் குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததற்கான கட்டணத்தை செலுத்தத் தவறிய அதன் தாய் மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், செலவுத் தொகையை அந்த சிசுவின் தந்தை நிவர்த்தி செய்த பின்னரே அதன் சடலம் அங்கிருந்து வெளியேற்ற அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!