
சிட்னி, அக் 6- ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அடுத்த மூன்று நாட்களுக்கு கடும் மழை பெய்யும் என்பதால் அங்கு பெரிய அளவில் வெள்ளம் ஏற்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமையும் மழை தொடரும் என வானிலைத்துறை தகவல் வெளியிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் La Nina பருவ நிலை மாற்றத்தினால் ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரையில் ஏற்கனவே மோசமான வெள்ளம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் மழை அதிகமாக பெய்யும் என்பதால் சிட்னி உட்பட முக்கிய நகரங்கள் வெள்ளக் காடாக மாறும் என்றும் வானிலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.