சிட்னி, ஏப் 7 – ஆஸ்திரேலியாவின் கிழக்குக்கரை பகுதியில் கடும் மழை பெய்தது. இதனால் சிட்னி உட்பட பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. சிட்னியின் முக்கிய சாலைப்பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளிலிருந்து பலர் வெளியேற்றப்பட்டனர். வெள்ள நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆடவர் ஒருவர் மீட்கப்பட்டார், பல இடங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடியதோடு மரங்களும் சாய்ந்தன. முதியோர் இல்லம் இருந்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த இல்லத்தை சேர்ந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
Related Articles
Check Also
Close