கோலாலம்பூர், பிப் 24 – 18 வயதுக்கு மேற்பட்ட சினோவெக் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், தங்களது பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள மார்ச் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சினோவெக் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களும், அனைத்து வகை தடுப்பூசி எடுத்து கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் , முழுமையாக தடுப்பூசி போட்டதற்கான தங்களது தகுதியை நிலைநிறுத்திக் கொள்ள பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டுமென சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கான காலக்கெடு பிப்ரவரி 28-ஆம் தேதியாக இதற்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான கால அவகாசம் தற்போது மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எப்ரல் முதலாம் தேதிக்குப் பின்னர் அவர்களது தடுப்பூசிக்கான தகுதி முழுமைப் பெறவில்லை என காண்பிக்கும்.