சென்னை, டிசம்பர் 31 – மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் இன்று, அவரின் தந்தை அவரது இல்லத்தில் மகள் சித்ராவின் துப்பட்டாவிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஓய்வு பெற்ற காவலரான அவரது தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.