Latestமலேசியா

சின் பெங் எனது உறவினரா? நிரூபியுங்கள் பார்க்கலாம் – குவான் எங் சவால்

கோலாலம்பூர், நவம்பர் 7 – கம்யூனிஸ்ட் சிங் பெங் தமது உறவினர் என கூறிய, பாஸ் கட்சி மகளிர் உறுப்பினருக்கு, அதனை நிரூபிக்க, DAP கட்சித் தலைவர் லிம் குவான் எங் இரு நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளார்.

கெப்பாலா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர், டாக்டர் சித்தி மஸ்துரா அதனை நிரூபிக்க தவறினால், அவர் மீது சட்ட நடவடிக்கை பாயுமென குவான் எங் எச்சரித்துள்ளார்.

“கெப்பாலா பாத்தாஸ் வெளியிட்ட கூற்றை அவர் நிரூபிக்க நான் வாய்ப்பு தருகிறேன். அவ்வாறு செய்யத் தவறினால், பின்னர் என்ன செய்ய வேண்டுமோ அதனை நான் செய்வேன்” என குவான் எங் சொன்னார்.

சித்தி மஸ்துரா இனவாதம், தீவிர சித்தாந்தம் மற்றும் அவதூறு ஆகியவற்றை பரப்ப முயல்கிறார்.

அதனால், கேவலமான அரசியல் நாடகங்களை விடுத்து, உண்மையை அடிப்படையாக கொண்டு பேச அவர் பழக்க வேண்டுமென குவான் எங் சாடினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!