சிப்பாங், நவ 29 – சிப்பாங் மாவட்டத்தில் வெள்ளத்தினால் எவரும் வெளியேற்றப்படவிட்டாலும் Dengkil, Sepang, மற்றும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA வை சுற்றியுள்ள பல்வேறு வெள்ள அபாய இடங்களை தீயைணைப்பு மற்றும் மீட்புத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. Kampung Giching கில் வெள்ள நீர் மட்டம் அதிகரிப்பதாக புகார் கிடைத்தபோதிலும் தீயணைப்புத்துறை அது குறித்து மதிப்பீடு செய்தபின் அங்கிருந்து எவரையும் வெளியேற்றவில்லையென KLIA தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் தலைவர் ரஷிவ் முகமட் ( Razif Mohamad ) தெரிவித்திருக்கிறார்.
உண்மையில் Kampung Giching கில் கனுக்கால் அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. மழை நின்றுவிட்டதால் வெள்ள நீர் குறையத் தொடங்கிவிட்டதாக அவர் கூறினார். இது வெள்ள அபாயத்தைக் குறைத்த போதிலும் , தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து, எந்த ஒரு நடவடிக்கைக்கும் தயார் நிலையில் இருப்பார்கள் என்று ரஷிவ் கூறினார்.
இன்று அதிகாலை வெள்ளம் காரணமாக கிவா ( Kiwa )போக்குவரத்து விளக்கு சந்திப்பில் சாலையின் ஒரு பகுதியை போலீசார் மூடினர்.
Kota Warisan னிலிருந்து பண்டார் பாரு சாலாக் திங்கி மற்றும் கே.எல்.ஐ.ஏ முதல் Kota Warisan வரையிலான சாலைகள் காலை 8 மணி நிலவரப்படி மூடப்பட்டதாக சிப்பாங் மாவட்ட போக்குவரத்து போலீசார் முகநூலில் பதிவிட்டுள்ளனர்.