சிப்பாங் – ஷா அலாமில் போதைப் பொருள் கும்பல் முறியடிப்பு

ஷா அலாம், ஜூலை 10 – சிப்பாங் மற்றும் ஷா அலாமில் செயல்பட்டு வந்த போதைப் பொருள் விநியோகக் கும்பலை முறியடித்த போலீசார் 74லட்சம் ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். சிப்பாங்கிலுள்ள வீட்டில் ஜூலை 5ஆம் தேதி சோதனையிட்ட போலீசார் 44 வயது ஆடவரை கைது செய்தாதோடு, அந்த நபர் அழைத்துச் சென்ற மற்றொரு நபரின் வீட்டில் 46.3 கிரேம் Methamphetamine மற்றும் 1.5 கிலோ எடையுள்ள கெத்தமின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு 1.62 மில்லியன் ரிங்கிட் என புக்கிட அமான் போதைப் பொருள் விசாரணைப் பிரிவின் இயக்குனர் டத்தோஸ்ரீ Kamarudin Md Din தெரிவித்தார்.
அந்த சந்தேகப் பேர்வழிகள் கிள்ளான் பள்ளாத்தாக்கில் போதைப் பொருள் விநியோகிப்பில் ஈடுபட்டு வந்திருப்பதும் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார். அதன் பின் ஷா அலாமில் ஜூலை 6ஆம் தேதி மாலை மணி 3.40 அளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 38 மற்றும் 47 வயதுடைய இரு ஆடவர்களை கைது செய்த போலீசார் 5.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய போதை மாத்திரைகள் மற்றும் 169. 4கிலோ Methamphetamine மற்றும் போதைப் பொருளையும் பறிமுதல் செய்ததாக கமாருடின் முகமட் டின் தெரிவித்தார்.