சிம்பாங் ஜெராம் சட்டமன்ற தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் நஸ்ரி அப்துல் ரஹ்மான் வெற்றி

ஜொகூர் பாரு, செப் 9 – ஜொகூர், Simpang Jeram சட்டமன்ற தொகுதிக்கான
இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் நஸ்ரி அப்துல் ரஹ்மான் (Nazri Abdul Rahman ) 3,514 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். இன்று நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் அவர் 13,844 வாக்குகளைப் பெற்றதன் மூலம் அந்த தொகுதியை பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் தற்காத்துக் கொண்டது.
இத்தொகுதியில் போட்டியிட்ட பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் வேட்பாளர் டாக்டர் மஸ்ரி யஹ்யா 10,330 வாக்குகளையும் , சுயேச்சை வேட்பாளர் S .ஜெகநாதன் 311 வாக்குகளையும் பெற்று தோல்வி கண்டனர். இம்முறை சிம்பாங் ஜெராம் சட்டமன்ற தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் நஸ்ரி 56.54 விழுக்காடு வாக்குகளை பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஜொகூர் சட்டமன்ற தேர்தலின்போது காலஞ்சென்ற சலாஹூடின் அயோப்பிற்கு கிடைத்த 40.94 விழுக்காடு வாக்குகளை ஒப்பிடும்போது இன்றைய இடைத் தேர்தலில் நஸ்ரி கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளார்.