ஈப்போ, ஜன 5 – ஜாலான் சிம்பாங் பூலாய் – கேமரன் மலையில் ஒரு உணவகத்திற்கு அருகேயுள்ள வனப் பகுதியில் புலி நடமாடிக்கொண்டிருக்கும் காணொளி சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதைத் தொடர்ந்து தேசிய பூங்கா மற்றும் வனவிலங்குத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மேல் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட பகுதிக்கு புலியை கண்டறியும் குழு அனுப்பப்பட்டிருப்பதாக பேரா வனவிலங்கு பூங்காத்துறையின் இயக்குனர் யூசோப் ஷாரிப் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை இரவு மணி 10 அளவில் அந்த காணொளியை தாங்கள் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். 17 வினாடிகளைக் கொண்ட அந்த காணொளியை டிக் டோக்கில் பயனீட்டாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.