ஈப்போ, பிப் 7 – ஜாலான் சிம்பாங் பூலாய் – கேமரன் மலை (Jalan Simpang Pulai- Cameron Highalands) சாலை பகுதியில் , புலி சுற்றித் திரியும் காட்சி அடங்கிய சில காணொளிகள் வைரலாகியிருப்பதை அடுத்து, அப்பகுதியில் Perhilitan எனப்படும் பேராக் வனவிலங்கு – தேசிய பூங்கா பாதுகாப்பு துறை, தொடர் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.
அப்பகுதியில் புலி நடமாட்டம் இருந்தது உண்மையே; எனினும் வரண்ட நிலம் என்பதால் புலியின் கால் தடத்தை இதுவரை அடையாளம் காண முடியவில்லை என , பேரா மாநில Perhilitan துறையின் இயக்குநர் யூசோஃப் ஷாரிஃப் (Yusof Shariff) தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பகுதியில் காணப்பட்ட புலி, Bukit Tapah பாதுகாக்கப்பட்ட நிரந்தர வனப் பகுதிக்கு அருகில் உள்ள, காட்டுப் பகுதிக்குள் மீண்டும் சென்றிருக்கலாமென அவர் கூறினார்.