
சென்னை, மார்ச் 19 – ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிம்பு நடிப்பில் மிரட்டலாக உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’. சிம்புவுடன் கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் டிரய்லர் காட்சி நேற்று வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நேற்று நடைபெற்ற வேளை, சிம்புவின் இப்படம் மார்ச் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களின் இயக்குநர் ஒபேலி என்.கிருஷ்ணா இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் .
இந்தப் படம் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான மஃப்டி வெற்றிபடத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பத்து தல படத்துக்காக உடல் எடை அதிகரித்திருந்த சிம்பு தற்போது தனது அடுத்த படத்துக்காக மீண்டும் உடல் இளைத்து மாறியிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டிருக்கின்றன.